![]() |
தூணிலும் இருப்பான்,
துரும்பிலும் இருப்பான்,
யுகங்கள் கடப்பான்,
என்றும் நிலைப்பான்!
அநீதி கண்டால்,
உள்ளம் கொதிப்பான்.
பக்தர் வேண்டும்
வரங்கள் கொடுப்பான்!
சோதனை என்னும்
வேதனை வரினும்,
சாய்ந்து இளைப்பாறிட
தோள்கள் கொடுப்பான்!
அதர்மம் எங்கும்
இருளெனப் பெருகினும்,
தர்மம் காக்கும்
தீபமாய் ஒளிர்வான்!
பொறுமை காத்துப்
பெருமை உணர்ந்தால்,
ஞாலம் காக்கும்
நெருப்பாய் உதிப்பான்!
பக்தப் பிரகலாதனின்
பாதம் தொழுதால்,
சிம்ம ஸ்வரூபன்
திண்ணமாய் அருள்வான்!
ஓம் நரசிம்மாய நம:
ஓம் நமோ நாராயணாய!
Image Source: Twitter
Comments
Post a Comment