This website, Sanatana Tamizh, is an endeavour to explore the age-old, and inevitably spiritual, relationship that Sanatana Dharma and Tamizh share; an effort to trace the history of Tamizh, its exponents, and the glorious past that is yet to be fully realised.
Sanatana Tamizh will feature posts in English and Tamizh, will reflect on the nuances of the language and the obvious, will travel back and forth in time, and will try to record pages of Tamizh history and notes on Sanatana Dharma as this boat wanders in the river of time and space. It is hoped that this pursuit would uncover some hidden gems in the vast treasure trove that is yet to be explored...
Disclaimer: All efforts are taken to keep opinions expressed in this site based on published claims to the extent possible. However, this is a reflection of my personal exploration, and consequently, no claims are made about the veracity of information published here. I, or this website, take no responsibility for the direct or indirect effects that may arise based on the information, personal opinions, or conclusions expressed here.
- Krish (@rhkrish)
சனாதன தர்மம் என்பது "புராதானமான தர்மம்" என்றும், "காலத்தால் அழியாத தர்மம்" என்றும் பொருள் கொள்ளும். தென்னிந்தியாவில் தோன்றிய தமிழ்மொழி, இன்றும் வழக்கில் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும்.
"சனாதன தமிழ்" எனும் இந்த இணையதளம், புராதானமான தமிழ் மொழிக்கும், சனாதன தர்மத்திற்கும் இடையே உள்ள பழமையான, ஆன்மீகமான உறவை மையம் கொண்ட ஒரு தேடல்; தமிழின் சரித்திரத்தையும், அம்மொழியின் மாமேதைகளையும், மகான்களையும், இன்றும் முழுவதும் அறியப்படாத அதன் உன்னதமான கடந்தகாலத்தையும் இணைத்து, கோடிட்டு வரையும் முயற்சி.
சனாதன தமிழின் பதிவுகள், தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். தமிழ் மொழியின் வெளிப்படையான படைப்புகளையும், அதன் நுணுக்கங்களையும், சனாதன தர்மத்தையும் ஆராயும் இத்தளத்தின் பதிவுகள், காலத்தினஂ ஓடத்தில் அலைபாய்ந்து பல ஸ்தலங்களிலும் கரை சேரும். புதையல்களை நாடும் இந்தத் தேடலில், விலைமதிப்பில்லா சில நவரத்தினங்களும் கிட்டுமென்ற நம்பிக்கையில் பயணத்தைத் தொடர்வோம்...
பொறுப்பு உரிமை கோராமை அறிவிப்பு: இத்தளத்தில் பதிவுபெறும் கருத்துக்களை, ஏற்கனவே பதிவுபெற்ற கூற்றின் அடிப்படையில் வெளியிட இயன்றவரை முயற்சிக்கப்படுகிறது. எனினும், இது எனது தனிப்பட்ட தேடலின் வெளிப்பாடானதால், இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களின் உண்மைத்தன்மைக்கு எவ்வித பொறுப்பும் ஏற்கப்படாது. எமது தகவல்கள், தனிப்பட்ட கருத்துக்கள், மற்றும் முடிவுகளால் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் நானோ, இந்த இணையதளமோ பொறுப்பாகாது.
- கிருஷஂ (@rhkrish)
Comments
Post a Comment