![]() |
Andal - Source: Wikimedia |
நான் ரசித்த கவிஞன் இன்று தரம் தாழ்ந்து போகவில்லை.
நான் தான் தரம் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் ரசித்திருந்திருக்கிறேன்.
நான் வியந்து வளர்ந்த தமிழில் குற்றங்கள் இல்லை.
குற்றம் புரியத் துணியும் கயவர்கள் தான் தமிழைப் போர்த்தி வலம் வந்திருக்கின்றனர்.
நான் வணங்கிய தர்மத்தில் பாபங்கள் இல்லை.
நான் தான் பாபங்களைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாமல் துணை சென்றிருக்கிறேன்.
நான் நம்பிய காவியங்களில் களங்கங்கள் இல்லை.
நான் தான் அவற்றைப் பழிப்பவரை எதிர்த்து நிற்கும் திறனற்றவனாக அவரை ஊக்குவித்திருக்கிறேன்.
இனியாவது உணர்வுற்று, தெளிவுற்று, துணிவுற்றுச் செயல்பட முனைவேனோ!
Comments
Post a Comment