Skip to main content

Posts

Showing posts from April, 2020

​நர​சிம்ம​ ஸ்வரூபன், திண்ணமாய் அருள்வான்!

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், யுகங்கள் கடப்பான், என்றும் நிலைப்பான்! அநீதி கண்டால், உள்ளம் கொதிப்பான். பக்தர் வேண்டும் வரங்கள் கொடுப்பான்! சோதனை என்னும் வேதனை வரினும், சாய்ந்து இளைப்பாறிட​ தோள்கள் கொடுப்பான்! அதர்மம் எங்கும் இருளெனப் பெருகினும், தர்மம் காக்கும் தீபமாய் ஒளிர்வான்! பொறுமை காத்துப் பெருமை உணர்ந்தால், ஞாலம் காக்கும் நெருப்பாய் உதிப்பான்! பக்தப் பிரகலாதனின் பாதம் தொழுதால், சிம்ம​ ஸ்வரூபன் திண்ணமாய் அருள்வான்! ஓம் நரசிம்மாய​ நம​: ஓம் நமோ நாராயணாய​! Image Source:  Twitter