Skip to main content

Posts

Showing posts from October, 2017

மீண்டுமொரு மகாத்மா

அந்நியரும் வஞஂசகரும் பாரதத்தை விட்டொழிய​ மெய்யுணரத் தீக்குளித்தார் சத்தியத்தில் காந்தி. பொய்யுரைத்து மானுட​த்தைத் தீயிலிடும் மாந்தர்  தாம்  வந்தவழி மறந்தன ரே   பல​ முகத்திரைகள் ஏந்தி. தீயிலிட்டும் வெந்திடாத  நித்தியமாம்  சத்தியத்தை  வெறியாட்டமிடும் ​ மூடர்  முற்றிலுமாய்த் துறந்தனரோ?  உள்ளிருக்கும் ஞானமதை எள்ளளவும் உணராது உடலளவில் நடமாடி உணர்வளவில் இறந்தனரோ? சாகாத​ தர்மமது கலியரசன் கட்டளையால் ஆகாத​ கர்மங்களைப் பாராதது போல் துஞஂசிடினும் மாறாத​ பக்தி கொண்ட​ எளியவரும் உயிர்வாழ​ மற்றுமொரு உத்தமனைக் காலமது தந்திடுமோ? வெற்றிக்கு வித்திடவும், உயரிடத்தை  எட்டிடவும் மீண்டுமொரு காந்தியை மனம்  எதிர்நோக்குவதேன்? உனக்குள் இருக்கும் நேர்த்திமிகு  நாயகனை துயில் மீண்டெழச் செய அது ​ மறுப்பதுமேன்? நாட்டையே காப்பதுவும் பலர்  சூழ்ச்சியை வீழ்ப்பதுவும் உனக்குள் அரங்கேறும் சிவ​  தாண்டவமானால் மாற்றுவதும்  நிலை மாறி விழித்தெழுவதும் உனையன்றி வேறில்லை மறப்பதுமேன்?